அம்மனை காண வந்து... அலையோடு போன மகன் ``என் புள்ள திரும்ப மாட்டானா..!'' கடலை நோக்கி கண்ணீரோடு தாய்
மாமல்லபுரம் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நவீன், ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு அவர்கள் மேற்கொண்ட ஆன்மிக பயணம் சோகத்தில் முடிந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நவீனை தேடி வருகின்றனர். இளைஞரின் தாய், எப்படியாவது மகன் திரும்ப மாட்டானா என அழுத முகத்துடன் கடலை நோக்கி சோகத்துடன் பார்க்கும் காட்சி நெஞ்சை உருக வைத்துள்ளது.