நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவு
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, நோயாளிகள் என அழைக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை "நோயாளிகள்" என அழைக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அவரது அறிவுறுத்தலின் படி, இனி வரும் நாட்களில் மருத்துவப் பயனாளி அல்லது மருத்துவப் பயனாளர்கள் என மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார் .