கழுத்தை குறிவைத்த மர்ம நபர்கள்.. ஸ்கூட்டியில் சென்ற பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்..
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சிந்து மற்றும் ஷீலா இருவரும், உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது செங்கிலிகுப்பம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஷீலாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.