நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையிலிருந்து, பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காரையார் அணையில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை 151 நாட்களுக்கு, தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் தலைமையில் காரையார் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.