Tiruchendur Temple | திருச்செந்தூர் சூரசம்ஹாரம் | "அனுமதியில்லை.." | வெளியான முக்கிய அறிவிப்பு
வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதையொட்டி திருச்செந்தூர் கடற்கரையை சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 22ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் கந்த சஷ்டி விழா நிறைவு பெறும் வரை கடற்கரையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்கவும், கடலில் நீராடவும் அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது