குட்டிகளுடன் சாலையில் உலா வந்த புலி... வெளியான திகில் வீடியோ!

Update: 2025-05-28 06:02 GMT

நீலகிரியின் கட்டபெட்டுவில் சாலையில் தாய் புலியும், அதை பின்தொடர்ந்த நான்கு குட்டிகளும் உலா வந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சமீப நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேயிலை தோட்டத்திலிருந்து, சாலைக்கு எகிறி குதித்த தாய் புலியும், பின்னால் குட்டிகளும் சென்றன. இதையடுத்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்