மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமான கிராம்ப்டன் நிறுவனம், NITEO, FLUIDO, SUPER FLO என 3 தனித்துவமான மின்விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், NITEO வகை மின்விசிறி, நியூக்ளியஸ் இயங்கு தளத்திலும்,FLUIDO வகை மின்விசிறி இண்டக்ஷன் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
SUPER FLO வகை மின்விசிறி, நிமிடத்திற்கு 260 சதுர மீட்டர் அளவுக்கு காற்று வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகை மின்விசிறிகளையும், சென்னை தியாகராய நகரில் உள்ள ரத்னா ஃபேன் ஹவுஸில், கிராம்ப்டன் ஃபேன்ஸ் நிறுவனத்தின் P & L பிரிவு தலைவர் அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர் குரு விஜய் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
மூன்று மாடல் மின்விசிறிகளும் தனித்துவமான வடிவமைப்பிலும், வண்ணங்களிலும் கிடைப்பதால், வாடிக்கையாளர்களின் சரியான தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.