Chennai News | "அரைகுறை ஆடையுடன் மிரட்டல்" நீதிபதி பயிற்சி மைய உரிமையாளர் மீது பெண் வழக்கறிஞர் புகார்
சென்னை வேளச்சேரி இளம் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நீதிபதி பயிற்சி மைய உரிமையாளரும், வழக்கறிஞருமான சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு கார் அனுப்பி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பதாகவும், தனியாக இருக்கும் நேரத்தில் அரைகுறை ஆடையுடன் வந்து மிரட்டுவதாகவும் இளம்பெண் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நீதிபதி பயிற்சி மைய உரிமையாளர் மீது, பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.