Thoothukudi Petrol Lorry | பெட்ரோல் லோடுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி - தூத்துக்குடியில் பரபரப்பு

Update: 2025-06-13 02:04 GMT

Thoothukudi Petrol Lorry | பெட்ரோல் லோடுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் லோடுடன் குடியிருப்பு பகுதிக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. பசுவந்தனையை நோக்கி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி, சாலைப்புதூர் பகுதியில் சாலையோர தடுப்பில் மோதி அருகே இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கவிழ்ந்தது. விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் லாரியை சுற்றி தடுப்புகள் அமைத்ததுடன், கிரேன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். டேங்கரில் இருந்து எரிபொருள் கசிந்ததால், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் மற்றும் நுரையை தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்