``இதான முக்கிய நீராதாரம்.. இப்படி அநியாயமா போகுதே’’ - மக்கள் கடும் வேதனை
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் குடிநீர் திட்ட ராட்சச குழாயில் வால்வு பழுதாகியுள்ளதால் அதன் வழியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிவருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அருகில் ராட்சச குழாய் பகுதிகளில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறுவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், இதனை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.