திருத்தணி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் திடீரென புகைமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பிணிகள் 19 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென ஃபிரிட்ஜ்ஜில் மின் கசிவு ஏற்பட்டு வார்டில் புகைமூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கர்ப்பிணிகளை வெளியேற்றி, உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு கண்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.