உயரதிகாரி சொன்னாலும், நாம் அடித்தால், நம் வாழ்க்கை பறிபோகும் என்பதை திருப்புவனம் சம்பவம், காவலர்களுக்கு உணர்த்தி உள்ளதாக திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். சென்னையில் குட் டே படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல் துறை மக்கள் பக்கம் இல்லை, அது எப்போதும் அதிகாரத்தின் பக்கம்தான் இருக்கிறது என்றார். சில இடங்களில்தான், காவல் துறை மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் பக்கம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.