Thirupparankundram Sikkandar Dargah | சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழா - பலத்த பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் தேர் கிளம்புதல் அதிகாலை வேளையில் கோலாகலமாக நடைபெற்றது.
மலையடிவாரத்தில் உள்ள பெரிய ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம், தமிழ் நாதஸ்வரம் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பவனி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தேர் ஊர்வலத்தைத் தொடர்ந்து புனிதச் சந்தனம் மலை மேல் உள்ள தர்காவிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
மலை மேல் நடைபெறும் உருஸ் விழாவில் பங்கேற்க 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ஆடு, கோழிகளைப் பலியிடவும் அசைவ உணவுகள் சமைக்கவும் அல்லது அங்குக் கொண்டு செல்லவும் நீதிமன்றம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டு, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க மலையடிவாரம் முதல் உச்சி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
50 பேருக்கு மட்டுமே அனுமதி என நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், அனைவரும் செல்லலாம் என்பதால் 50 பேர் கொண்ட பெயர் விவரங்களை காவல்துறையினர் சரிபார்த்து மலை மீது அனுப்பி வைத்தனர்.