திருப்பரங்குன்றம் விவகாரம்.. பாஜக சோசியல் மீடியாக்களில் பரப்பிய தகவலால் திடீர் பரபரப்பு..உண்மை என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் பலி கொடுக்கப் போவதாக இஸ்லாமிய அமைப்பு போஸ்டர் ஒட்டியுள்ளது என பாஜக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் போலியானது என்று, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய படத்தில், தேதியை மாற்றி, எடிட் செய்து, பாஜகவின் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவலை அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் அமைப்பினரும் மறுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.