Thiruchendur | திருச்செந்தூர் கோயில் தரிசனம் - பக்தர்களின் ஆட்சேபத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு
திருச்செந்தூர் கோயிலில் நிறுத்த தரிசனம்- மனு தள்ளுபடி
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரேக் தரிசனத்தை செயல்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், விழா நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரேக் தரிசனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்கு கட்டணம் 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பக்தர்களின் ஆட்சேபத்தை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.