திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு , சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.