Thiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மண்டலாபிஷேகம் - அந்த நாளுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

Update: 2025-08-07 02:39 GMT

Thiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மண்டலாபிஷேகம் - அந்த நாளுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

ஆக.11 - திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை விழா நிறைவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவு பெற்ற நிலையில், மண்டலாபிஷேகம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி குடமுழுக்கு விழா நடந்த நிலையில் , வருகிற 11-ம் தேதியுடன் மண்டல பூஜை விழா நிறைவு பெறவுள்ளது. வரும் 11ஆம் தேதி காலை 5 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்பட்டு, ஐந்தரை மணிக்கு விஸ்வரூப தீபாதாரனையும், 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் ஒன்பதரை மணி முதல் 10:30 மணிக்குள் மண்டல அபிஷேக பூர்த்தி பூஜையும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சதையும், மாலை 5 மணிக்கு குமரவிடங்க பெருமாள் மற்றும் அம்மாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்