எங்கு பார்த்தாலும் வெள்ளை புகைபோல் கடும் பனிமூட்டம்.. உதகையில் மக்கள் அவதி..

Update: 2025-07-26 12:54 GMT

கடும் பனிமூட்டம் காரணமாக மக்கள் அவதி

கனமழை எதிரொலியாக உதகையில் கடும் பனிமூட்டம் நிலவியது.. நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. குறிப்பாக உதகையில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்ததுடன், கடும் பனிமூட்டமும் நிலவியதால் மக்கள் அவதி அடைந்தனர்...

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். நீலகிரி அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.. மேலும் பலத்த காற்றினால் உதகையில் தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள் , 8th மைல், Tree பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன..

Tags:    

மேலும் செய்திகள்