"சங்கம் ஒன்றும் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் கிடையாது" - - ராதா ரவி காட்டம்

Update: 2025-08-10 16:51 GMT

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது, இதில் ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். சென்னையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வாக்களிக்க நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலரும் வந்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதா ரவி, இது ஒன்னும் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் அல்ல, இது ஒரு கஷ்டமான விஷயம் என காட்டமாக கூறினார். நடிகர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் குரல் கொடுக்க தான் சங்கம் உள்ளது எனவும் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்