Theni Hospital | ``குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்தப்போ ஃபேன் விழுந்துருச்சி.. ரெண்டு உயிரு..’’
மருத்துவமனையில் அறுந்து விழுந்த மின்விசிறி-உயிர் தப்பிய தாய், சேய்
தேனி போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில், பச்சிளம் குழந்தை உடன் படுத்திருந்த இளம்பெண்ணின் படுக்கையின் மீது மின்விசிறி அறுந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜக்கம நாயக்கன்பட்டி பிரிவை சேர்ந்த பிரவீனா என்ற இளம்பெண் சிசேரியன் செய்யப்பட்டு, தனது குழந்தை உடன் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த போது, திடீரென மின்விசிறி அறுந்து விழுந்து உள்ளது. இதில் நல்வாய்ப்பாக, குழந்தையும் தாயும் உயிர் தப்பினர். இதையடுத்து, போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சரிவர கழிவறை சுத்தம் செய்யப்படுவது இல்லை எனவும், போதிய குடிநீர் வசதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து உள்ளன.