தருமபுரம் ஆதீனம் மடத்தில் திருட்டு | வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
திருவாரூர், தருமபுரம் ஆதீனத்தின் ராஜாங்க கட்டளை மடத்தில் 80,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு வீதியில் உள்ள ராஜாங்க கட்டளை மடத்தில் பின்பக்க கதவை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போர்வை போர்த்திய நபர் ஒருவர் மெதுவாக வந்து டிராயரை உடைத்து பணத்தை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் ஜெகபர் சாதிப் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.