டீச்சரிடமே வேலையை காட்டிய இளைஞர் -மடக்கி பிடித்து குமுறி எடுத்த மக்கள்

Update: 2025-07-24 06:02 GMT

பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு தர்ம அடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறித்த ஆந்திர மாநில இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் பெண்ணகர் கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கார்த்தி என்பவர் ஆரணி பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது அவரது செல்போனை இளைஞர் ஒருவர் பறித்து சென்றதால் அவர் கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்