கெங்கை அம்மன் திருக்கல்யாண வைபவம் - அம்மனை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான பெண்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதில் உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்த பின், சிரசு மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.முன்னதாக சீர்வரிசைகள் கொண்டு வந்து யாகங்கள் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.