போடப்பட்ட இரண்டே நாளில் பெயர்ந்து வந்த தார் சாலை - இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ
சேலம் மாவட்டம் கருமந்துறை பெரிய கல்ரயன் மலைப்பகுதியில் புதிய தார்ச்சாலை போடப்பட்ட இரண்டே நாட்களில் பெயர்ந்து வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற முறையில் சாலை போடப்பட்டுள்ளதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் செல்லும் பிரதான சாலை இப்படி மோசமாக போடப்பட்டிருப்பது குறித்து அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.