மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோதையாறு, இரட்டை அருவி, கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் எனவும் குமரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.