சென்னையில் ஹோட்டலுக்கு சோதனைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உணவகத்தில் தடை செய்யப்பட்ட ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். வாலஸ் கார்டன் 2வது தெருவிலுள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனையிட்ட போது ஹுக்கா புகைப்பதற்கு சட்டவிரோதமாக வாடிக்கையாளர்களை அனுமதித்தது தெரியவந்தது. இதனையடுத்து உணவகத்தின் மேலாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் சுமார் 30 கிலோ எடை கொண்ட ஹுக்காவிற்கு பயன்படுத்தும் புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.