தாம் பெரிதாக எந்த சேவைகளையும் செய்துவிடவில்லை என்றும், செய்கின்ற ஒரு சில காரியங்களுக்கும், மக்கள் தான் காரணம் என்றும் நடிகரும், சமூக சேவகருமான பாலா தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில், தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலா, நெகிழ்ச்சியுடன் இவ்வாறு தெரிவித்தார்.