வியட்நாம் கடலில் தீவிரமடைந்துள்ள கஜிகி Kajiki சூறாவளியால் சுமார் 5 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. வியட்நாம் கடற்கரையில் நிலைகொண்டுள்ள சூறாவளி மேலும் வலுவடைந்து, அதி கனமழை பெய்து வருகிறது, இதனால், சீனாவின் சான்யா நகரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையால் சீனாவுக்கு வரலாறு காணாத ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றால், நகரமே உருக்குலைந்து உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் வரலாற்றிலேயே அதி பயங்கரமான சூறாவளி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.