பல ஆண்டு `வடகலை நாம’ பிரச்சனை - சென்னை ஐகோர்ட் எடுத்த முடிவு

Update: 2025-08-22 04:34 GMT

Vadakalai | Chennai Highcourt | பல ஆண்டு `வடகலை நாம’ பிரச்சனை - சென்னை ஐகோர்ட் எடுத்த முடிவு

வடகலை நாமம் பொறிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் வடகலை தென்கலை, பிரச்சனை முடிவடையாத பிரச்னையாக இருக்கும் நிலையில், வெள்ளிக்கவசத்தில் வடகலை நாமம் பொறிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் குலசேகரப்படியில் பொருத்த வெள்ளிக்கவசத்தை ஒருவர் தானமாக வழங்கினார். அதன் சங்கு சக்கரத்திற்கு நடுவில் ஆதிசேஷனுடன் பொறிக்கப்பட்டிருந்த கவசத்தின் நடுவில் வடகலை நாமத்தை பொறிக்க உத்தரவிட வேண்டும் என வடகலை தரப்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து, வடகலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலையிட முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாடவேண்டும் எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்