களமிறங்கிய உயிர்கொல்லி... தூக்கம் தொலைந்த மக்கள் - பறந்த வார்னிங்...

Update: 2025-07-11 16:39 GMT

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களுக் கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில், வனத்துறை சார்பில் பொறுத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராமசாமி மலை, ஜோடுகுளி, குண்டூர் ஆகிய மலை கிராம மக்களுக்கு சென்று வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் கூண்டுகளை வைத்து சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்