14 வருடங்கள் கழித்தும் கெடாமல் இருந்த பொருள்.. திருச்செந்தூரில் நடந்த அதிசயம்

Update: 2025-06-12 03:26 GMT

14 வருடங்கள் கழித்தும் கெடாமல் இருந்த பொருள் திருச்செந்தூர் கோயிலில் நடந்த அதிசயம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆறு கோபுர விமான கலசங்களையும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், 14 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்காக கோபுர கலசங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட உள்ளது. கோபுரத்தின் மேலே இருந்த கலசங்களை கழற்றியபோது 14 வருடங்களுக்கு முன்பு கலசங்களில் வைக்கப்பட்ட வரகு எந்தவித சேதமுமின்றி, கெட்டுப்போகாமல் இருந்தது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்