மூதாட்டியின் விற்பனை பொருட்களை தள்ளிவிட்ட விவகாரம்..அரசியல் பிரமுகர் விளக்கம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை சந்தையில் மூதாட்டியின் விற்பனை பொருட்களை தள்ளிவிட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். ஆனைமலை திமுக பிரமுகர் சந்தோஷ், சம்பந்தப்பட்ட மூதாட்டி தன்னுடைய உறவினர் என்பதால் உரிமையுடன் நடந்து கொண்டதாகவும், வாரம் அவருக்கு 200 ரூபாய் பணம் தந்து உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் கட்சி பிரமுகர்கள் சிலர், தன் நற்பெயரை கெடுக்க வீடியோ வெளியிட்டள்ளதாகவும் தனது விளக்கத்தில் குறுப்பிட்டுள்ளார்.