பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலியான விவகாரம் - பாலிவுட்டில் எழுந்த குரல்

Update: 2025-07-19 02:58 GMT

ஸ்டண்ட் கலைஞர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் பாலிவுட் நடிகர்

ஸ்டண்ட் கலைஞர்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் எஸ்.எம். ராஜு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமாரின் முயற்சியால் இந்திய அளவில் 650க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் இன்சூரன்ஸ் பெற்றுள்ளனர். இதனால் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள சண்டை பயிற்சியாளர் விக்ரம் சிங் டஹியா, பாலிவுட்டில் உள்ள 650 முதல் 700 ஸ்டண்ட் மற்றும் ஆக்‌ஷன் குழுவினர் பாதுகாப்பாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்