திடீர் போராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்களின் சங்கம்.. சேலத்தில் பரபரப்பு

Update: 2025-06-19 01:49 GMT

சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை நியமிக்க கோரி, மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்