1 ரூபாய் கூட லஞ்சம் வாங்கலன்னு கெத்தாக சொன்ன DSP-யின் லஞ்சம் வாங்கிய ரிப்போர்ட்
மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு, அவரது பணிக்காலத்தில் செய்த தவறுகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் வெளியாகியுள்ளன.
தான் ஒரு ரூபாய் கூட கையூட்டு வாங்கவில்லை... நேர்மையாக பணி செய்து வருவதாக டிஎஸ்பி சுந்தரேசன் கூறிவந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளிவந்த டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளின் விவரம், மயிலாடுதுறை காவலர்களின் வாட்ஸ் அப்-களில் அதிகம் பரவி வருகிறது.
திருட்டு விசிடி விற்பனை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றது குறித்து தொடரப்பட்ட வழக்கு....பாஸ்போர்ட் வழங்குவதற்கு கையொப்பமிட லஞ்சம் வாங்கிய வழக்கு.... பாலியல் சீண்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகளில் சுந்தரேசன் தண்டனை பெற்றது போன்றவை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது, காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் நேர்மையாக இருப்பதால் தன்னை உயர் அதிகாரிகள் துன்புறுத்துவதாக சுந்தரேசன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர் என்று காவலர்கள் மத்தியில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.