தண்ணீர் தொட்டியில் மிதந்த 5 மாத குழந்தை உடல் - `குடும்ப தகறாரில் நடந்த கொலையா?’
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே லாவண்யா என்பவரது ஐந்து மாத குழந்தை வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வாழும் லாவன்யா நள்ளிரவு வீட்டிற்கு வந்த இரண்டு பேர் தன்னிடம் நகை பறித்ததோடு குழந்தையையும் பிடிங்கி நீர் தொட்டியில் வீசி சென்றதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குழந்தையை உண்மையிலேயே கொள்ளையர்கள் கொன்றார்களா?அல்லது குடும்ப தகறாரில் கொல்லப்பட்டதா என விசாரணை செய்து வருகின்றனர்.