வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய கரடி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கல்லாடா கிராமப் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அங்குள்ள கோவில் வளாகத்திற்குள் நுழைந்து எண்ணெயைக் குடிப்பதை கரடி வாடிக்கையாக வைத்திருந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் கரடி சிக்கியது. தொடர்ந்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.