உதகை அருகே கண்ணேரி மந்தனை பகுதியில் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்களை சேதப்படுத்திய கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், கண்ணேரி மந்தனை பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த கரடி ஒன்று கிராமத்தில் உள்ள கோவிலினுள் நுழைந்து, பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.