குழந்தை பெற்றெடுத்த பெண் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

Update: 2024-12-30 02:06 GMT

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண் உயிரிழந்த‌ விவகாரத்தில், உறவினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். காட்டுமன்னார்கோவிலை அடுத்த கொண்டாயிருப்பை சேர்ந்த சங்கீதா என்பவர், குழந்தை பெற்றெடுத்த நிலையில், ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சை என குற்றம் சாட்டி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியர், டிஎஸ்பி மருத்துவ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நஷ்ட ஈடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்காத‌தால், இரண்டாவது நாளாக மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த‌தால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்