பாட புத்தகத்தில் நல்லகண்ணு வரலாறு - விஜய் சேதுபதி வலியுறுத்தல்
நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய விஜய் சேதுபதி, விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணுவை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருந்ததாக குறிப்பிட்டார்.