Thanjavur | "புள்ளைய காப்பாத்துங்க.. கால்ல விழுந்தேன்.. யாருமே Response பண்ணல.." - கதறும் தாய்

Update: 2025-10-05 09:24 GMT

தஞ்சை அருகே வேலைக்கு சென்ற மகளை அங்குள்ளவர்கள் கொத்தடிமையாக வைத்திருப்பதாக கூறி அவரை மீட்டு தருமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.. நெல்லியடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமாரி மாளவிகாவின் மகள் ஜெயா, தோழியுடன் கோயமுத்தூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி தாயை தொடர்பு கொண்ட ஜெயா, தான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்