கொதி கொதிக்கும் எண்ணெயில் கையை விடும் மக்கள் - திருவண்ணாமலையில் வினோதம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கையால் வடை எடுத்து பக்தர்கள் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழ்பாலூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்னும் சிலர், ஆணி காலணி அணிந்தும், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுத்தும் விநோதமான முறையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.