மனைவியுடன் கோயிலுக்கு வந்த ஆளுநர் - ஸ்தம்பித்த வடபழனி..

Update: 2025-02-12 02:22 GMT

தைப்பூசத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலில், ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். மனைவியுடன் கோயிலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆலய அர்ச்சகர்கள் பூரணகும்பம் மரியாதை செய்து வரவேற்றனர். இதையடுத்து கோயிலின் உள்ளே சென்று ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வருகையின் காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை..

Tags:    

மேலும் செய்திகள்