ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்த சூழலில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் கடந்த பத்தாம் தேதி வரை இந்த தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. கடைசி நாளான பத்தாம் தேதி இறுதி நிலவரப்படி 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.