கோயில் கும்பாபிஷேகம் - சிங்கப்பூர் அமைச்சர் பங்கேற்பு

Update: 2025-07-14 12:50 GMT

திருப்பத்தூர் அருகே ஸ்ரீ வீரமுக விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமுக விநாயகர் கோயில் கற்கோவிலாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கோயிலில் இரண்டு கால பூஜைகளாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், பூஜைகளும் தீப ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேகம் வைபவம் விமரிசையாக நடந்த நிலையில், சிறப்பு அழைப்பாளராக பூலாங்குறிச்சி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்