Temple | நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

Update: 2025-10-05 02:49 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த நைனாமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3 வது சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் 3,600 படிக்கட்டுகள் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி 3வது சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்