மது பாட்டிலால் இளைஞரை குத்திய சிறுவர்கள் - போலீசார் விசாரணை
நெல்லை ஆலடியூர் அருகே இளைஞர் ஒருவரை சிறுவர்கள் மது பாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் குமார் என்பவர் ரயில் சந்திப்பு பேருந்து நிலையம் அருகே சம்பவத்தன்று இரவு உணவு அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் காலி மதுபாட்டிலை உடைத்து மனோஜ் குமாரை குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.