வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து முத்தமிட்ட ஆசிரியர்

Update: 2025-05-15 06:02 GMT

திருவாரூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து முத்தமிட்ட ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உப்புக்கார தெருவில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நல்ல பாம்பு படிக்கட்டு பகுதியில் பதுங்கியுள்ளது. இதையறிந்து அங்கு சென்ற அதே பகுதியில் வசிக்கும் உடற்கல்வி ஆசிரியர் குளஞ்சி ராஜேஷ் என்பவர் தனது நண்பர் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்து, அதனை முத்தமிட்டார். பின்னர் பாம்பை சாக்கு பையில் வைத்து காட்டுப்பகுதியில் விட்டு சென்றார். மேலும் அவர் வீடுகளில் நுழையும் பாம்பை பிடித்து முத்தமிட்டு காட்டில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்