TATA SUV Cars | தீபாவளியில் நாடே திரும்பி பார்க்க சம்பவம் செய்த TATA கார்கள்

Update: 2025-10-22 07:12 GMT

பண்டிகை கால சேல்ஸ் - 33% டாடா கார் விற்பனை உயர்வு Tata Motors கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 33 சதவீதம் விற்பனையுடன், புதிய மைல் கல்லை எட்டியதாக அந்நிறுவனத்தின் MD-யும், CEO-வும் ஆன சைலேஷ் சந்திரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நவராத்திரி முதல் தீபாவளி வரையான 30 நாட்களில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும்.. SUV-வில் Nexon, 38 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 73 சதவீதம் வளர்ச்சியும், Punch 32 ஆயிரம் யூனிட்களுடன் 29 சதவீதம் வளர்ச்சியும் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல, மின்சார வாகனங்கள் பிரிவிலும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 37 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்