பெண்ணின் செல்போனை உடைத்த தாசில்தார்?.. அழுதுகொண்டே பெண் பரபரப்பு புகார்

Update: 2025-07-30 03:57 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தனது நிலம் தொடர்பான மனுவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வீடியோ எடுக்க முயன்ற பெண்ணின் செல்போனை பிடுங்கி தாசில்தார் உடைத்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் வசிக்கும் ரேணுகாதேவி, ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது நில ஆவணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அறிவிப்பின்றி சிலரின் பெயர்கள் ஆவணத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, மண்டல துணை தாசில்தாரிடம் கேள்விகள் எழுப்பிய படி வீடியோ எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த தாசில்தார், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, செல்போனை பிடுங்கி வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்